ஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி!

நவம்பர் 09, 2019 347

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தி தீர்ப்பு குறித்து ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் அயோத்தியில் வழங்கப் பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த ஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து அவர் தெரிவிக்கையில், தீர்ப்பு அதிருப்தி அளிப்பதாகவும், சட்டப்படி முஸ்லிம்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும், இலவசமாக வரும் அந்த நிலம் எங்களுக்கு தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...