ராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி!

நவம்பர் 09, 2019 347

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அஸ்ஸாமை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ரூ 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது என்றும் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் (சனிக்கிழமை) தீர்ப்பளித்தது.

இந்நிலையில், அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக அஸ்ஸாமை சேர்ந்த 21 இஸ்லாமிய சமுதாயங்களைக் கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அஸ்ஸாம் சிறுபான்மையினர் வளர்ச்சி வாரியத்தின் தலைவருமான மோமினுல் அவால் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...