முஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி!

நவம்பர் 11, 2019 316

ஐதராபாத் (11 நவ 2019): பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்ற தீர்ப்பை அடுத்து பேசியுள்ள அசாதுத்தீன் உவைசி உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றார்.

ஐதராபாத்தில் மீலாதுந் நபி விழாவில் பேசிய அவர், "மசூதி இடித்தது தவறு என்றால் அதனை இடித்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?

யாரோ உங்கள் வீட்டை இடித்துவிட்டார்கள், என்றால் அதனை அவர்களுக்கே கொடுத்துவிட்டு, வேறு இடத்தை வீட்டுக்கு சொந்தக்காரர்களுக்கு கொடுப்பீர்களா? முஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை. எங்களுக்கு தேவை எங்கள் உரிமை. இடம் அல்ல.

அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் முஸ்லிம்களை திட்டமிட்டு ஏமாற்றி விட்டன. முஸ்லிம்கள் விரக்தி அடைய வேண்டாம். எல்லாவிதமான சவால்களையும் முஸ்லிம்கள் சந்திப்பார்கள்."என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...