இந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்!

நவம்பர் 12, 2019 324

கோழிக்கோடு (12 நவ 2019): கேரளாவில் உள்ள ஒரு மசூதியில் நடக்க இருந்த மீலாது நபி விழா அருகில் உள்ள இந்து வீட்டு திருமணத்தையொட்டி ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளனர் மசூதி நிர்வாகிகள்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த செம்மாங்குழியைச் சேர்ந்தவர் நாராயணன் நம்பியார். இவரது வீடு செம்மாங்குழியில் உள்ள இடிவேட்டி ஜூம்மா மசூதி எதிரே உள்ளது. வீட்டிற்கும், மசூதிக்கும் இடையே 4 மீட்டர் இடைவெளியே உள்ளது.

இந்த மசூதியில் நவம்பர் 10 ஆம் தேதி மீலாது விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப் பட்டு அலங்காரம் நடைபெற்றது.

இந்நிலையில் நாராயணன் நம்பியாரின் மகள் பிரதியூஷா, (வயது 22). இவருக்கும், பாலாரியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் நவம்பர் 10-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்து வந்தனர். பிரதியூஷா வீட்டில் திருமண வேலைகள் நடந்தபோது, வீட்டின் எதிரே இருந்த மசூதியும் களை கட்டி காணப்பட்டது. ஒரே நாளில் இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றால் சிரமம் ஏற்படும் என்று திருமண வீட்டார் நினைத்தனர்.

இதனை அறிந்த மசூதி நிர்வாகிகள், மீலாது விழாவை ஒரு வாரம் தள்ளி வைப்பதாகவும் திருமணத்தை விமர்சையாக நடத்துங்கள் என்று மணமக்களை வாழ்த்தி, தகவலை திருமண வீட்டாருக்கு தெரியப் படுத்தினர்.

மேலும் திருமணம் முடிந்த தம்பதிகளை மசூதி நிர்வாகத்தினர் வாழ்த்தி மணமகன் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்..

இந்து தம்பதியின் திருமணத்திற்காக மிலாது நபி விழா தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இடிவேட்டி ஜூம்மா மசூதி நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் குவிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...