அதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை!

நவம்பர் 13, 2019 254

மும்பை (13 நவ 2019): டாட்டாவின் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

உலகின் சொகுசு ரக கார்களான ஆடி, பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன், இந்தியாவின் டாடா குழுமம் தயாரித்துள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை அத்தனை சிறப்பாக இல்லை.

உலகம் முழுக்கவே ஆட்டோமொபைல் வர்த்தகம் சவாலானதாகவே இருக்கிறது. இந்த சூழலிலும், ஜாகுவார் லேண்ட் ரோவரின் விற்பனை, கடந்த நான்கு மாத காலமாக தொடர்ந்து சீனாவில் அதிகரித்து இருப்பதை சுட்டிக் காட்டும் நிலையில் இந்தியாவின் டாட்டா ஜாகுவார் லேண்ட் ரோவர் மிகபெரிய சரிவை சந்தித்துள்ளது.

அக்டோபர் 2018-ல் ஆன மொத்த ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனையை விட, கடந்த அக்டோபர் 2019-ல் 5.5 சதவிகித விற்பனை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...