மூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நவம்பர் 13, 2019 218

புதுடெல்லி (13 நவ 2019): மூன்று முக்கிய வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் நாளை (வியாழக்கிழமை) முக்கியமான தீர்ப்பை வழங்க உள்ளது.

ரஃபேல் (Rafale Case) மற்றும் சபரிமலை வழக்குகள் (Sabarimala Case).மற்றும் சபரிமலையில் பெண்கள் நுழையும் விவகாரம். இந்த இரண்டு வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மறுஆய்வு மனு விசாரணை தீர்ப்பை நாளை காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) அறிவிக்க உள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேக்கி தாக்கல் செய்த அவமதிப்பு மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது. "சவுகிதார் சோர் ஹை" (காவல்காரன் ஒரு திருடன்) என மோதி குறித்து ராகுல் காந்தி (Rahul Gandhi) கூறியதற்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருந்தாலும், அந்த வழக்கு குறித்து இறுதி தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 - 50 வயது பெண்கள் நுழைய தடை இல்லை என்றும், அய்யப்பன் கோவிலில் நுழைய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதாவது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் 4: 1 என்ற விகிதத்தில் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு இந்து மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர்.

சபரிமலை ஐயப்பன் பெண்கள் நுழையும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுமார் 56 சீராய்வு மனுக்கள் சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 48 மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நாளை (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...