ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது!

நவம்பர் 13, 2019 186

புதுடெல்லி (13 நவ 2019): மாணவர்கள் போராட்டத்தை அடுத்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் சமீபத்தில் விடுதி கட்டணம் 300 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதோடு, ஆடைக்கட்டுப்பாடு, நேரக்கட்டுபாடு உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த ஒரு வாரமாக இந்த புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜேஎன்யு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது, பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கை நோக்கி மாணவர்கள் அணிவகுத்துச் செல்ல முயன்றனர்.ஆனால், அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில், மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே மாணவர்கள் பிரச்னை குறித்து நவம்பர் 15ம் தேதி டீன்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உறுதி அளித்தது. இதையடுத்து மாலையில் போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெற்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...