சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு!

நவம்பர் 15, 2019 260

திருவனந்தபுரம் (15 நவ 2019): சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்டுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் பலர் சட்ட நுணுக்கங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி இப்போதைக்கு சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது. நாளை நடை திறக்க உள்ள நிலையில் பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதை அரசு ஆதரிக்காது.

சபரிமலை கோவிலில் தற்போதுள்ள நிலையே தொடரும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம். நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதற்கிடையே பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...