உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி மறுப்பு!

நவம்பர் 16, 2019 921

புதுடெல்லி (16 நவ 2019): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற டெல்லி சட்ட கல்லூரி மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லி தேசிய சட்டப்பல்கலை கழகத்தில் நடைபெற்ற கல்வியில் சிறந்த மாணவர்களுக்கான பதக்கத்தை பெற அப்பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் முதலிடம் பெற்ற சுரபி கர்வா என்ற மாணவி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் பெற மறுப்பு தெரிவித்து பதக்கம் பெறும் விழாவை புறக்கணித்துள்ளார்.

இதற்காக அவர் கூறும் காரணம், ரஞ்சன் கோகாய் பதக்கம் தருவதற்கு தகுதியானவர் அல்ல என்பது அவரது கருத்து. இது பாபர் பசூதி - ராமர் கோவில் வழக்கிற்கு முன்பே நடந்த நிகழ்வு என்றாலும், ரஞ்சன் கோகாய் மீது சுமத்தப் பட்ட பாலியல் குற்றச் சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டதே காரணம் என்று கூறியுள்ளார் சுரபி கர்வா.

சுரபி கர்வா பயின்றது அரசியல் சாசன சட்டப்பிரிவு. மேலும் அரசியல் சாசன சட்டப்பிரிவில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து சுரபி கர்வா ஆய்வு மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...