உலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா?

நவம்பர் 16, 2019 507

மும்பை (16 நவ 2019): உலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரங்களில் மும்பை முதலிடம் வகிக்கிறது.

ஐரோப்பிய கார் பாகங்கள் உற்பத்தி நிறுவனமான மிஸ்டர் ஆட்டோ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, .உலகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் மும்பை நகரத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேடு பள்ளமான சாலைகள், தேவையற்ற வேகத்தடைகள், அதிகப்படியான டிராபிக் சிக்னல்கள், வாகன நெரிசல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது

மும்பையை அடுத்த்உ பாகிஸ்தான் கராச்சி இரண்டாமிடம் வகிக்கிறது. மூன்றாம் இடத்தில் கொல்கத்தா உள்ளது.

இதேபோல், வாகனங்களை இயக்க மிகவும் வசதியான சொகுசான நகரங்களின் பட்டியலில் கனடா நாட்டின் கல்காரி நகரம் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் துபாய் நகரமும், மூன்றாம் இடத்தில் கனடாவின் ஒட்டாவா நகரமும் உள்ளது. மொத்தம் 15 அம்சங்களைக் கணக்கில் வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் எரிபொருள் செலவு, சாலை வரி, அரசு செய்யும் மேம்பாடுகள் ஆகியனவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...