அனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா?

நவம்பர் 16, 2019 418

மும்பை (16 நவ 2019): ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் தொடர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அனில் அம்பானி தனது இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்து வந்தவர் அனில் அம்பானி. கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தை அடைந்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய பதவியில் இருந்து, அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.

இவருடன் சேர்ந்து, சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கெர், சுரேஷ் ரங்காஷார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...