நடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாகிஸ்தான்!

நவம்பர் 16, 2019 422

இஸ்லாமாபாத் (16 நவ 2019): நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அறை வழிநடத்தி காப்பாற்றியுள்ளது.

ஜெய்ப்பூரிலிருந்து மஸ்கட் சென்ற இந்திய விமானம் பாகிஸ்தான் வழிப்பாதையில் சென்றபோது இயற்கைச் சீற்றத்தில் சிக்கி தடுமாறியது. இந்நிலையில் விமானி உதவியை நாடினார்.

இதனை அடுத்து பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரவே அடர்த்தியான விமானப் போக்குவரத்து வழியாக அதை இயக்க உதவினார். தெற்கு சிந்து மாகாணத்தின் சோர் பகுதி அருகே இந்த விமானம் அசாதாரண வானிலையைச் சந்தித்ததாக விமானப் போக்குவரத்து ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் விமானத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...