ஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து!

நவம்பர் 17, 2019 140

சித்தூர் (17 நவ 2019): ஆந்திராவில் கேரள விரைவு ரெயில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த கேரள விரைவு ரெயில், ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஏர்பேடு ரயில் நிலையம் அருகே அதன் ஒரு ரயில் பெட்டி தடம்புரண்டது. இதுகுறித்து தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவிக்கையில்,

"ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டி தடம் புரண்டுள்ளது. அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். தடம்புரண்டதற்கான காரணம் குறித்து அறிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்" என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...