ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்!

நவம்பர் 17, 2019 253

புதுடெல்லி (17 நவ 2019): விரைவில் ஏர் இந்தியா நிறுவனமும், பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் விற்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியால் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை வாங்க "முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், 2019-20 நிதி ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் எதிர்பார்ப்புடன் மத்திய அரசு ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பெரிய பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நடப்பு நிதி ஆண்டில் கடந்த சில மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்துக்கும் கீழே குறைந்த நிலையில், சில துறைகளில் விற்பனை அதிகமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...