தலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை!

நவம்பர் 17, 2019 419

சங்குரூர் (17 நவ 2019): பஞ்சாப் மாநிலத்தில் தலித் இளைஞர் ஒருவரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித் இளைஞருக்கும் ஒரு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் ஏற்கன்வே பேசி தீர்க்கப் பட்டுவிட்ட நிலையில், அந்த தலித் இளைஞரை தகராறு செய்தவர் சிலருடன் சேர்ந்து அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரது வீட்டில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் தலித் இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது சிறுநீரை கொடுத்து குடிக்க வலியுறுத்தி துன்புறுத்தியுள்ளது அந்த கும்பல்.

படுகாயம் அடைந்த தலித் இளைஞர் PGIMER மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த தலித் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் பஞ்சாப் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநில முழுவதும் போராட்டம் வெடித்துள்ளனர். மேலும் பல சமூக அமைப்புகள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...