பாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்களுடன் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி!

நவம்பர் 18, 2019 308

புதுடெல்லி (18 நவ 2019): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 65) கடும் விமர்சனங்களுடன் நேற்று ஓய்வுபெற்றார்.

1978-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து கொண்ட இவர் 2001-ம் ஆண்டு அசாம் ஐகோர்ட்டு நீதிபதி ஆனார். 2010-ம் ஆண்டு பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றப்பட்டார். 2011-ம் ஆண்டு அதன் தலைமை நீதிபதி ஆனார். 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற ரஞ்சன் கோகாய், 13 மாதங்கள் அந்தப் பதவியை வகித்துள்ளார்.

அயோத்தி பாபர் மசூதி - ராமர் கோவில் 2.77 ஏக்கர் நில உரிமை தொடர்பான விவகாரம் மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அந்த வழக்கில் இவரது தலைமையிலான அமர்வு கடந்த 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

அந்த நிலத்தை யாரும் எதிர்பாராத அளவில் இந்துக்களுக்கு வழங்க உத்தரவிட்டதுடன் அங்கு ராமர் கோவில் கட்டவும் அனுமதி அளித்தது. முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்காகவே இவரை மக்கள் எளிதில் மறக்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் பாலியல் குற்றசாட்டையும் சந்தித்து பரபரப்ப்பை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இவரே.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...