எம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரபரப்பு!

நவம்பர் 18, 2019 303

மைசூரு (18 நவ 2019): கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீர் சையத் கத்தியால் குத்தப் பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கர்நாடகாவின் மைசூரு நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தன்வீர் சைத் சென்றுள்ளார். அவர் அருகே சென்ற நபர் ஒருவர் திடீரென சைத்தின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தப் பட்ட சம்பவத்தை திருமண நிகழ்ச்சியை வீடியோ எடுத்தவர்கள் படம் பிடித்துள்ளனர். கத்தியால் குத்தியவர் ஃபர்ஹான் என்று தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எனினும் ஏன் எம்.எல்.ஏவை கத்தியால் குத்தினார் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையே தன்வீர் சையத் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மற்ற தகவல்கள் மருத்துவமனை தெரிவிக்கவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...