சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்!

நவம்பர் 18, 2019 174

ஐதராபாத் (18 நவ 2019): ஏழுவயது சிறுவனை கடத்தி வைத்துக் கொண்டு 10 ஆம் வகுப்பு மாணவன் ரூ 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மீர்பேட் பகுதியில், 7 வயது சிறுவன் திடீரென மாயமானான். பல இடங்களிலும் தேடிய பெற்றோர் சிறுவனை யாரோ கடத்தி சென்றதாக சந்தேகமடைந்தனர். இந்நிலையில், சிறுவனின் தந்தைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, 3 லட்சம் கொடுத்தால் சிறுவனை விட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

மிரட்டல் வந்த போன் எண்ணை வைத்து குற்றவாளியை மூன்று மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர். முன்னதாக மிரட்டியவன் யார் என்றபோது 10 ஆம் வகுப்பு மாணவன் என்பதுதான் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பணத்திற்காக இதனை செய்ததாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். எனினும் போலீசார் இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...