சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி!

நவம்பர் 18, 2019 162

புதுடெல்லி (18 நவ 2019): சியாச்சின் (Siachen) பகுதியில் இருக்கும் ராணுவ இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக சியாச்சின் ராணுவ இடத்தில் பனிச்சரிவு (avalanche) ஏற்பட்டதாகவும் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 8 ராணுவ வீரர்கள் இந்தப் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள், ஏஎன்ஐ-க்கு தகவல் அளித்துள்ளது.

சுமார் 18,000 அடிகளுக்கு மேல் இன்று மாலை 3:30 மணி அளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டிருக்கும் எனப்படுகிறது.

மேலும் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...