மத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதியம்: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

நவம்பர் 19, 2019 224

புதுடெல்லி (19 நவ 2019): மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

நிர்வாகம்: சென்ட்ரல் சில்க் போர்டு

மேலாண்மை: மத்திய அரசு

பணி: இயக்குநர்

காலியிடம்: 01

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 53வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - ரூ.2,15,900 வரையில்

விண்ணப்பிக்கும் முறை: www.csb.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Central Silk Board Complex, Hosur Road, BTM Layout, Madiwala, Bangalore - 560068.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.csb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2019

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...