நுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி!

நவம்பர் 19, 2019 299

கொல்கத்தா (19 நவ 2019): மேற்கு வங்க எம்.பி நுஸ்ரத் ஜஹான் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் எம்பியும் நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.

ஆஸ்துமா கோளாறு உள்ள அவர் அவ்வப்போது இன்ஹேலர் உபயோகித்து வந்துள்ளார். ஆனால் மூச்சுத் திணறல் அதிகரிக்கவே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு தற்போது சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அவர் அதிகமான போதைப் பொருள் உட்கொண்டதால்தான் மயங்கி விழுந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டதாக வதந்தி பரவியது. ஆனால் இதனை மறுத்துள்ள மருத்துவமனை வட்டாரம் அவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதும், அதற்காக அவர் மருந்து உட்கொண்டதையும் உறுதி படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...