டெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்!

நவம்பர் 19, 2019 199

புதுடெல்லி (19 நவ 2019): டெல்லி, லக்னோ உள்ளிட்ட வட இந்திய பகுதியில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.

நேபாளத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் இதன் அளவு 5.1 ஆக பதிவானது என்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மக்கள் வீட்டை விட்டு வெளியே தலைதெறிக்க ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.

நில அதிர்வு ஏற்பட்ட சில நிமிடங்களில் அதுபற்றிய தகவல்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர். நேபால் எல்லை மற்றும் உத்தர்காண்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நில அதிர்வை தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. எனினும் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...