பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்!

நவம்பர் 20, 2019 248

புதுடெல்லி (20 நவ 2019): தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதன்கிழமை மதியம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை மதியம் 12 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது மகாராஷ்டிரத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த சந்திப்பின்போது மகாராஷ்டிர விவசாயிகளுக்கு போதிய அளவு நிதியுதவி அளிப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தரப்பில் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வரும் வேளையில் இருவருக்கும் இடையிலான இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...