ஜியோ தொலை தொடர்பு கட்டணங்கள் உயர்வு!

நவம்பர் 20, 2019 209

மும்பை (20 நவ 2019): தொலை தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டனத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

இதையொட்டி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களைப் போல தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி உள்ளது.

அடுத்த சில வாரங்களில் இந்த கட்டண உயர்வு அமலாக இருக்கிறது. இது குறித்து தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயுடன் ரிலையன்ஸ் ஜியோ ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை செல்போன் சேவை கட்டணங்களை (அழைப்பு கட்டணம் மற்றும் இணையதள கட்டணம்) உயர்த்துவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...