மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உறுதி!

நவம்பர் 20, 2019 205

புதுடெல்லி (20 நவ 2019): மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் நிலையான ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் பிரித்விராஜ் சாவன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தவுடன் அங்கு ஆட்சி அமைவதில் ஏற்பட்ட சிக்கலால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சிவசேனா அங்கு ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது இப்படியிருக்க காங்கிரஸ் கட்சியின் பிரித்விராஜ் சாவன் கூறும்போது, மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை தொடர்ந்து நடைபெறும். விரைவில் மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை தர முடியும் என்பதில் தான் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...