குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி!

நவம்பர் 21, 2019 221

புதுடெல்லி (21 நவ 2019): மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் பாதுகாப்புத்துறை நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர் பிரக்யா சிங் தாகூர். மேலும் மஹாத்மா காந்தியின் உருவ பொம்பையை சுட்டு மகிழ்ச்சி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவரும் இவரே.

இப்படி அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்திவரும் இவரை பிரதமர் மோடி கண்டிக்கவும் செய்துள்ளார்.

ஆனால் பாஜகவில் எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப் பட்ட இவருக்கு தற்போது, பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற., ஆலோசனை குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...