மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது. இதற்காக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சி சிவசேனா கட்சி இந்துத்வா கொள்கையை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இதையே தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.
புதன்கிழமை இரவு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் உரையாடினார். இச்சந்திபின் போது சிவசேனா கட்சி இந்துத்வா பிம்பத்தை விட்டு விலகி மதச்சார்பற்ற கட்சியாக இருப்பதைப் பற்றி பேசியுள்ளார். சிவசேனாவின் தலைவரும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் மகாரஷ்டிராவில் விரைவில் ஆட்சி அமைக்கப்படும் என தெரிகிறது.