வகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி!

நவம்பர் 22, 2019 238

வயநாடு (22 நவ 2019): கேரளாவின் பள்ளி ஒன்றில் 10 வயது சிறுமி பாம்புக் கடித்ததால் பரிதாபமாக உயிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவி ஷெரின், வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, பள்ளியின் சுவரில் இருந்த ஒரு துளைக்குள் இருந்து பாம்பு வந்ததாகக் கூறப்படுகிறது. பாம்புக் கடித்த தகவலறிந்ததும் சிறுமியை பள்ளி தலைமை ஆசிரியர் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். சிறுமி தொடர்ந்து வாந்தி எடுத்ததால் உடனடியாக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

ஆனால், சிறுமியின் நிலைமை மோசமடைந்ததால் கொண்டு செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில், பாம்பு கடித்த தகவலறிந்து சிறுமியை உரிய நேரத்தில் மருத்துவமனையில் கொண்டு சேர்க்காததால் தான் தன் மகள் ஷெரின் உயிரிழந்தாள் என்று பெற்றோரும், உறவினர்களும் பள்ளி தலைமை ஆசிரியரையும், பள்ளியையும் முற்றுகையிட்டனர். பள்ளி ஆசிரியர் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...