முடிவுக்கு வந்த மகாராஷ்டிரா பிரச்சனை - உத்தவ் தாககரே மகாராஷ்டிரா முதல்வராகிறார்!

நவம்பர் 22, 2019 266

மும்பை (22 நவ 2019): உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், மகாராஷ்டிராவில் புதிய அரசு உத்தவ் தாக்கரே தலைமையில் அமையும் என்றார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சித் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.

இதனிடையே துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆலோசனை குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் திருப்தி அளிக்கிறது என்றார்.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து சிவசேனா தனது இந்துத்வா கொள்கையை மாற்றிக் கொண்டு மதசார்பற்ற கொள்கைகளுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பேசுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...