தீவிரவாதிகளுக்கு உதவும் நிறுவனத்தில் பாஜக பெற்ற நன்கொடை - பதிலளிக்க காங் கோரிக்கை!

நவம்பர் 23, 2019 235

புதுடெல்லி (23 நவ 2019): தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்யும் நிறுவனத்தில் பாஜக நன்கொடை பெற்றதாக எழுந்துள்ள குற்றச் சாட்டு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி இக்பால் மேமன் என்கிற இக்பால் மிர்ச்சி. இவரிடமிருந்து சொத்துக்களை வாங்கியதாகவும், பணபரிவர்த்தனை செய்ததாகவும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.அந்நிறுவனத்திடம், கடந்த 2014-15ல் பாஜ கட்சி தேர்தல் நன்கொடையாக ரூ.10 கோடி பெற்றிருப்பதாக தி வயர் இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘தேர்தல் நிதி பத்திர ஊழல் விவகாரம் தேச துரோக விவகாரமாகி உள்ளது. இதற்கெல்லாம் பிரதமர் மோடியும், பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவும் பதில் சொல்லியே தீர வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜாவும் பாஜக இவ்விவகாரம் குறித்து பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து பாஜக தரப்பிலிருந்து எவ்வித பதிலும் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...