சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இதனை எதிர்த்து இந்துத்வாவினர் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு. ஆனால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை ரத்து செய்யவில்லை.
இதனால் பெண்கள் சபரிமலைக்கு செல்வதில் தடையேதும் இல்லாமல் இருந்தது. ஆனால் கேரள அரசு சென்ற முறை அளித்த பாதுகாப்பை இம்முறை பெண்களுக்கு அளிக்க இயலாது என்று கூறிவிட்டது.
இதனை அடுத்து சில சமூக ஆர்வல பெண்கள் சபரிமலை செல்வதில் ஆர்வம் காட்டினர். அதனடிப்படையில் கேரளா கன்னூர் பல்கலைக்கழக விரிவுரையாளர் பிந்து ஆம்னி என்ற பெண் இன்று சபரிமலை சென்றார். அங்கு மறைந்திருந்த பாஜகவை சேர்ந்த ஒருவர் கையில் வைத்திருந்த மிளகாய் ஸ்பிரே மூலம் பிந்து அம்மனியின் முகத்தில் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர்.
இவ்விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.