மகாராஷ்டிர அரசியலில் உச்சக் கட்டம் - உச்ச நீதிமன்றம் பட்னாவிஸ் அரசுக்கு நெருக்கடி!

நவம்பர் 26, 2019 243

புதுடெல்லி (26 நவ 2019): மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள், தேவேந்திர பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நியாயமாக நடைபெற சில நிபந்தனைகளை விதித்துள்ளது நீதிமன்றம். நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற கூடாது. சட்டசபைக்குள் அனைவர் முன்பாகவும், வெளிப்படையாக வாக்குப்பதிவு நடத்திதான், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை அறிவிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் ஒளிவு மறைவு இருக்க கூடாது என்பதால், தொலைக்காட்சிகளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை நேரலையில் காட்ட வேண்டும்.

இப்போதைய சபாநாயகரை தவிர்த்துவிட்டு, இடைக்கால சபாநாயகரை தேர்ந்தெடுத்து, அவர் மூலமாகத்தான் வாக்கெடுப்பு நடக்க வேண்டும்.

இவ்வாறு அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் முன்பாகவே, அனைத்து எம்எல்ஏக்களும் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...