மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு - கூட்டணி கட்சிகள் முடிவு!

நவம்பர் 26, 2019 232

மும்பை (26 நவ 2019): மகாராஷ்டிர முதல்வராகவும், கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் எம்எல்ஏ-க்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை முறையே தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் இன்று (செவ்வாய்கிழமை) ராஜிநாமா செய்தனர். இதன்மூலம், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளன. இந்தக் கூட்டணியின் சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் டிரைடெண்ட் ஹோட்டலில் கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனையின் முடிவில் உத்தவ் தாக்கரே கூட்டணி கட்சியின் தலைவராகவும் மகாராஷ்டிர முதல்வராகவும் இருப்பார் என்று முடிவெடுக்கப் பட்டது.

இதனை அடுத்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். வரும் டிசம்பர் 1ஆம் தேதி உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...