மக்களவையில் பரபரப்பு - பிரக்யா சிங் தாகூர் நீக்கம்!

நவம்பர் 28, 2019 195

புதுடெல்லி (28 நவ 2019): மக்களவையில் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதை அடுத்து மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழுவிலிருந்து பிரக்யா தாகூர் நீக்கப்பட்டுள்ளார்.

மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாத்தின் போது பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, ‘மகாத்மா காந்தியின் மீது நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்ததின் காரணமாக 32 ஆண்டுகள் காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்’ என்று பேசினார்.

அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகுர், ’தேசபக்தர் குறித்து நீங்கள் உதாரணம் கூறக்கூடாது’ என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவையில் பிரக்யா தாகுரின் கருத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

பாஜக செயல் தலைவர் ஜே.பி.நாட்டாவும் கண்டனம் தெரிவித்த நிலையில் மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழுவிலிருந்து பிரக்யா தாகூர் நீக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...