பதவியிழந்த சில தினங்களிலேயே மகாராஷ்டிர முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றம் சம்மன்!

நவம்பர் 29, 2019 282

கான்பூர் (29 நவ 2019): பதவியிழந்த சில தினங்களிலேயே மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

தேர்தல் பிரமாண பத்திரத்தில் குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை இணைக்காத விவகாரம் தொடர்பான வழக்கில், தேவேந்திர பட்னாவிசுக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின்போது, பட்னாவிஸ் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், குற்ற வழக்குகள் குறித்த விபரங்கள் எதையும் குறிப்பிடவில்லை எனக்‍கூறி, அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பட்னாவிஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்‍கில் கோரியிருந்தார். இவ்வழக்கு தொடர்பாகவே நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...