பழைய எம்ஆதார் செயலியை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள் - இப்போது அப்டேட்ட ட் வெர்சன் வந்திருக்கிறது!

நவம்பர் 29, 2019 250

புதுடெல்லி (29 நவ 2019): புதிய ஆதார் செயலியை யுஐடிஏஐ சமீபத்தில் அப்டேட் செய்துள்ளது. இதனால் பழைய எம் ஆதாரை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு புதிய எம்ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இந்த மேம்படுத்தப்பட்ட செயலி மூலம், ஆதார் விவரங்களை நாம் நமது செல்போனில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து யுஐடிஏஐ தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, உங்கள் செல்போனில் இருக்கும் எம்ஆதார் செயலியை அன்-இன்ஸ்டால் செய்துவிட்டு, புதிய எம்ஆதார் செயலியை பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்த இஆதார் செயலியை ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் செல்போன்களிலும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

முன்பிருந்த இஆதார் செயலியை விட இது மிகுந்த பாதுகாப்பான செயலி என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பயன்படுத்தவும் எளிதானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று ஆதார் சர்வீஸ் டேஷ்போர்ட், இரண்டாவது மை ஆதார் செக்ஷன்.

ஆதார் சர்வீஸ் டேஷ்போர்ட், ஆதார் தொடர்பான அனைத்து ஆன்லைன் சேவைகளையும் பெறும் இடமாகும்.

இதில் மை ஆதார் பகுதி முற்றிலும் பயனாளருக்கான இடமாக இருக்கும்.

இந்த செயலி மூலமாக, நீங்கள் எப்போதும் ஆதார் அட்டையை கைவசம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.

இந்த செயலி மூலமாக, ஒருவர் தனது செல்போனிலேயே தனது ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு, ஆன்லைனில் இல்லாத போதும் பயன்படுத்த முடியும்.

மை ஆதார் பகுதியில், ஒரு பயனாளர், தனது ஆதார் எண் மற்றும் விவரங்களை பதிவு செய்து தனக்கான பிரத்யேகக் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஆதாரில் இருக்கும் முகவரி உள்ளிட்ட சில விவரங்களை இந்த செயலி மூலமாகவே திருத்தியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

புதிய க்யூஆர் கோட் எனும் வசதி மூலம், பயனாளர்கள் மிகுந்த பாதுகாப்போடு ஆதார் எண்ணை மற்றொருவருக்கு பகிரலாம்.

ஆதார் செயலியை லாக் செய்து வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதாவது 4 ரகசிய எண்களைக் கொண்டு செயலியை லாக் செய்யலாம்.

பிறகென்ன.. ஏற்கனவே ஆதார் செயலி இருப்பவர்கள் மேம்படுத்தப்பட்ட செயலியை பதிவேற்றம் செய்ய வேண்டியதுதான். இதுவரை இந்த செயலியைப் பயன்படுத்தாதவர்கள், தற்போது பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டியதுதான்..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...