காதலிப்பதாக சொன்ன பெண் போலீஸ் - மயங்கிய தாதா!

நவம்பர் 30, 2019 294

போபால் (30 நவ 2019): தலைமறைவாக இருந்த தாதாவை காதலிப்பதாகக் கூறி மடக்கிப் பிடித்துள்ளார் பெண் போலீஸ் ஒருவர்.

மத்திய பிரதேச மாநிலம், சதார்பூர் மாவட்டம் நவுகோன் பகுதியை சேர்ந்தவர் பாலகிஷன் சவுபே. பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையா தாதாவான அந்த நபர் பல வருடங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். எனினும் பலமுயற்சிகள் எடுத்தும் போலீசால் அவரை பிடிக்க முடியவில்லை.

அப்போதுதான் அந்த தாதாவுக்கு திருமணம் செய்யவிருப்பதாகவும் அதற்காக பெண் தேடுவதாகவும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மாதவி என்பவர், பாலகிஷனை திருமணம் செய்வதாக கூறி தனது பழைய போட்டோவை, அவரது நண்பர் மூலம் அனுப்பியுள்ளார். போட்டோவை பார்த்து மயங்கிய பாலகிஷன், மாதவியை சந்திக்க ஒப்பு கொண்டுள்ளார். இதற்கான இடமும் முடிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பாலகிஷனை, அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். பெண் சப் இன்ஸ்பெக்டரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...