அந்த நான்கு பேரையும் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள் - ஹர்பஜன் சிங் வலியுறுத்தல்!

டிசம்பர் 02, 2019 281

ஐதராபாத் (02 டிச 2019): அந்த கொடூரர்கள் நான்கு பேரையும் பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பிரியா ரெட்டி கூண்டு வன்புணர்வு செய்யப் பட்டு எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு நிர்பயா என்கிற அளவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குற்ரவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நெட்டிசன்கள் #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy உள்ளிட்ட ஹாஷ் டேக்குகளை உருவாக்கி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பிரியங்கா ரெட்டியின் கொடூர மரணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், உள்ளிட்ட பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கும், அதே சமயம் தார்மீக கோபத்தையும் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் 'நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். இத்தகைய விஷயங்களை மீண்டும் மீண்டும் நடக்க அனுமதிக்கிறோம், ஆனால் எதிலும் மாற்றமில்லை. இது போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதை வலியுறுத்த, இவர்களை எல்லாம் ஊர் மத்தியில் வைத்து ஏன் தூக்கிலிடக் கூடாது? பிரதமர் மோடி அவர்களே, பிரியங்கா ரெட்டிக்கு உங்கள் கவனம் தேவை’ என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...