ஐதராபாத் ராஜஸ்தானை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்!

டிசம்பர் 03, 2019 187

பாட்னா (03 டிச 2019): ஐதராபாத், மற்றும் ராஜஸ்தானில் நடந்த வன்புணர்வு படுகொலைகளை தொடர்ந்து தற்போது பீகாரிலும் ஒரு பெண் வன்புணர்ந்து எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் குகுதா கிராமத்தில் பெண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றினர். அனினும்ல் இறந்தது யார் என அடையாளம் காண முடியவில்லை. பெண்ணின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து பேசிய புக்சார் மாவட்ட காவல்துறையினர், ``புக்சார் மாவட்டம் குகுதா கிராமத்தில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து (Idathi) காவல்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் இருந்தது. பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகமாக இருக்கிறது. நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தோட்டா ஒன்றையும் சேகரித்துள்ளோம். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். பெண் ஒருவர் சடலமாக இருப்பதை கேள்விப்பட்டு 100-க்கும் அதிகமான கிராம மக்கள் குவிந்தனர். இருப்பினும் இறந்தது யார் என அடையாளம் காண முடியவில்லை.

இறந்தது, 20 வயதுக்குட்பட்ட பெண் என்றும் அவர் வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தடவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...