அதிர்ச்சி – கொரோனா வார்டுகளில் பணிபுரியும் 300 நர்ஸ்கள் (செவிலியர்) ராஜினாமா!

Share this News:

கொல்கத்தா (21 மே 2020): கொல்கத்தாவில் இனப்பாகுபாடு காட்டுவதாகக் கூறி 300 செவியிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புக்கு 2,961 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 1000 -த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர். இதுவரை 250 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் நாட்டில் அதிக பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 300 செவிலியர்கள் இவர்கள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் நோயாளிகள் சிலர் தங்கள் மீது எச்சில் துப்புவதாகவும், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Share this News: