பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த தப்லீக் ஜமாத்தினர் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு!

Share this News:

ஐதராபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த 38 தப்லீக் ஜமாத்தினர் பட்டியலை தெலுங்கானா அரசிடம் அசாதுத்தீன் உவைசி ஒப்படைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதித்து மீண்ட தப்லீக் ஜமாத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிறருக்கு பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 38 தப்லீக் ஜமாத்தினர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர்களைப் பற்றிய பட்டியல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐதராபாத் எம்.பி.யும், AIMIM தலைவருமான அசாதுதீன் ஒவைசி செவ்வாயன்று தெரிவித்தார்.

மேலும் சில மீடியாக்கள் “இந்த நல்லெண்ணம் கொண்டவர்களைத்தான் கொரோனாவை பரப்பியவர்கள் என்றும், கொரோனா ஜிஹாதிகள் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டன.” என்று தெரிவித்தார்.


Share this News: