50 ஆண்டுகள் தோல்வியையே சந்திக்காமல் பொன்விழா கொண்டாடும் முன்னாள் முதல்வர்!

451

திருவனந்தபுரம் (17 செப் 2020): கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தொடர்ந்து 50 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்து பொன்விழா கொண்டாடுகிறார்.

கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் இருந்து 1970 லிருந்து இதுவரை தோல்வியை சந்திக்காமல் 50 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் இதுவரை 11 தேர்தல்களை சந்தித்துள்ளார்.

இந்திரா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கூட தோல்வியை சந்தித்திருந்தபோதும் உம்மண் சாண்டி ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  பாஜகவைக் கை கழுவும் எடப்பாடி - அதிர்ச்சியில் பாஜக!

முதல்வராக இருந்த போதும் சரி இப்போது சாதாரண எம்.எல்.ஏ.வாக இருக்கும் போதும் சரி திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் அவரை எப்போதும் யாரும் சந்தித்து பேசலாம்.

தொலைபேசியில் கூட, அவரே பதிலளிப்பார்.முதல்வராக இருந்த போது அவர் செல்லும் இடத்திற்கு வாகன அணிவகுப்பு எல்லாம் இருக்காது. ரெயிலில் தனி ஆளாக பயணித்து பல இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கான வழிமுறைகளை முதல்வராக இருந்தபோதும் பின்பற்றும் எளிமையான அரசியல்வாதி உம்மண் சாண்டி.