குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 70 லட்சம் பேர் பங்குபெற்ற மனித சங்கிலி!

Share this News:

திருவனந்தபுரம் (26 ஜன 2020): கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 620 கிலோ மீட்டர் தூரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறாது

இந்த சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டத்தை திரும்பப் பெறவலியுறுத்தியது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் இன்று 620 கி.மீ தூரம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் இன்று நடந்த போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் கன்னம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகவரை வாசிக்கப்பட்டபின் மாலை 4 மணிக்கு மனிதச்சங்கிலி தொடங்கியது. தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ். ராமச்சந்திரன் பிள்ளையும், களியக்காவிளையில் முடியும் இடத்தில் எம்.ஏ.பேபியும் நின்றனர். ஏராளமான பொதுமக்களும், முக்கிய நபர்களும், மாணவர்களும், மாணவிகளும் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

ஏறக்குறைய70 லட்சம் மக்கள் வரை இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றார்கள் எனக் கூறப்படுகிறது.

https://www.facebook.com/theekkathir/videos/2828248153879959/


Share this News:

Leave a Reply