அமைச்சர் உட்பட ஒரேநாளில் 778 பேருக்‍கு கொரோனா பாதிப்பு!

மும்பை (24 ஏப் 2020): மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்‍கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக அம்மாநிலத் தலைநகர் மும்பையின் நிலை மோசமாகி வருகிறது. மஹாராஷ்ட்ராவின் மொத்த கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் மும்பையில் உள்ளனர்.

அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, மஹாராஷட்ர மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு. ஜிதேந்திரா அவஹாத்துக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 வயதாகும் அவருக்‍கு, மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, மும்பாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஹாட் நியூஸ்:

கட்டாய மதமாற்றம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (05 டிச 2022): கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் விரிவான பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய மத மாற்றம் நாட்டில் பரவலாக...

சவூதியில் வாட் (வரி) மற்றும் வெளிநாட்டவர்களுக்கான லெவியில் மாற்றமில்லை!

ரியாத் (09 டிச 2022): சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரிகளில் எந்த மாற்றமும் இல்லை. "கோவிட் காலத்தில், உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்படாது. தற்போதைக்கு தற்போதைய முறை தொடரும்" என்று...

கத்தாரில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்ட டாக்டர்.ஜாகிர் நாயக் நிகழ்ச்சிகள்!

தோஹா (09 டிசம்பர் 2022): பிரபல இஸ்லாமிய மதபோதகர் டாக்டர். ஜாகிர் நாயக், FIFA World Cup 2022 நடந்து வரும் கத்தாருக்குச் சென்றுள்ளார். அங்கே அவரது தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டங்களும்...