ஸ்டேட் வங்கியின் புதிய அறிவிப்பு!

Share this News:

புதுடெல்லி (17 டிச 2021): கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி புதிய ஆபஃர் ஒன்றை அறிவித்துள்ளது

இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ‘Pulse’ என்ற புதிய கிரெடிட் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெல்கம் கிஃப்டாக வழங்குகிறது

இந்த சலுகை ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி சேர்க்கும் வகையில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸை உறுதி செய்யும் வகையிலான பல்ஸ் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மருத்துவம் சார்ந்த பயன்களை பெற பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்டை கொண்டு ஹாலிடே கவரேஜ், எரிபொருள் நிரப்பும் போது விலக்கு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் பிற சலுகைகளையும் இந்த கார்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply