உத்திர பிரதேசத்தில் மாற்றத்தை உருவாக்குவோம் – ஒவைசியின் மாணவர் பிரிவு உறுதி!

155

புதுடெல்லி (12 பிப் 2021): ஒவைசியின் AIMIM கட்சி ஒரு மாணவர் பிரிவை உருவாக்கி, பல்கலைக்கழக அரசியல் மற்றும் நாட்டில் தேர்தல்களில் தீவிரமாக செயல்பட தயாராகி வருகிறது.

உத்தரப்பிரதேசம் அலகாபாத் பல்கலைக்கழக யூனியன் தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமின் மாணவர் பிரிவு போட்டியிடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவர் பிரிவு உருவாக்கப்பட்டது.

உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்களை அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தி மாற்றங்களை உருவாக்குவோம் என்பதில் AIMIM உறுதியாக உள்ளது. .

இதைப் படிச்சீங்களா?:  கூகுளுக்கு இந்திய செய்தி நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை!

எம்.ஏ முதல் ஆண்டு மாணவர் முகமது அமீர் தலைமையில் அலகாபாத் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் மற்றும் உறுப்பினர் இயக்கம் ஏற்பாடு செய்யப்படும் என்று எய்ஐஎம் மாநில தலைவர்கள் தெரிவித்தனர்.

வட மாநிலங்களில் முஸ்லிம் அரசியலில் தவிற்க முடியாத கட்சியாக AIMIM உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது,