ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுடெல்லி (28 மார்ச் 022): பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஆதரித்து உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் இரண்டு முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமிய நூல்கள் குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தின் முதன்மையான மற்றும் மிக உயர்ந்த ஆதாரமான புனித குர்ஆனைப் பற்றிய தவறான புரிதலை முன்வைக்கிறது என்று மனுதாரர் தரப்பில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

“கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பில், முஸ்லிம் பெண்களின் மத சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைக் குறைக்கிறது” என்று வாரியம் மனுவில் கூறியுள்ளது.

ஹாட் நியூஸ்: