என்.பி.ஆருக்கு ஆவணங்கள் எதுவும் சமர்பிக்க தேவையில்லை – அமித் ஷா!

புதுடெல்லி (13 மார்ச் 2020): “என்.பி.ஆருக்கு ஆவணங்கள் ஏதும் தேவையில்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில், இதுகுறித்து நேற்று மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமித்ஷா, “என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஆவணங்கள் ஏதும் மக்கள் அளிக்கத் தேவையில்லை. உங்களிடம் எந்த தகவல் இருக்கிறதோ அதை அளித்தால் மட்டும் போதும். தெரியாத கேள்விகளை நீங்கள் விட்டு விடலாம்” என்றார்.

மேலும் ‘சந்தேகத்திற்கிடமானோர் (Doubtful) என்ற பிரிவு என்.பி.ஆரில் இடம்பெறாது. யாரும் அந்தப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்’ என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

முன்னதாக இதுகுறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அமித் ஷா பதிலளித்தார்.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....