விரைவில் சிஏஏ அமல்படுத்தப்படும் – அமித் ஷா!

224

கொல்கத்தா (03 ஜூலை 2022): கோவிட் பூஸ்டர் தடுப்பூசி பிரச்சாரத்திற்குப் பிறகு சிஏஏ அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த தாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகரி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை (திருத்த) சட்டம் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்ற காத்திருக்கும் நிலையில் இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. பெறும் போராட்டமும் வெடித்தது.

இதைப் படிச்சீங்களா?:  மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசியருக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை!

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜகவின் செயல்பாடுகள் மற்றும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கோவிட் தடுப்பூசி பிரச்சாரம் முடிந்தது. சிஏஏ அமல்படுத்தப்படும் என்று ஷா தெரிவித்ததாக சுவேந்து அதிகரி தெரிவித்தார்..