மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதி!

431

புதுடெல்லி (02 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது ட்வீட்டர் பதிவில் “கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளைப் அறிந்தவுடன், நான் சோதனை செய்து கொண்டபோது அதில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.